ஷான் 
உதே 
 Shaan
Uday 
    
சிந்தனை துணுக்குகள்  1 

Jan 2021
எனது சில சிந்தனைகள்
சிறு வரிகளில்


வாழ்க்கை நினைவுகள்
பாடல் வரிகள்
ஷான் உதே
Read On PDF
பதிவேற்றியது
Aug 2020
சொற்கள்
203
பக்கம் A5
0.81
பக்கம் A4
0.54
நிமிடம்
2
பார்வைகள்
479

ன்று, வானில் ஒலித்ததை பள்ளி பயிற்சிப்புத்தகங்களின் கடைசி பக்கங்களில் எழுதிக்குவித்த அதே வரிகள் தான் இவை.

அறையும் குறையுமாக பாடும் பக்குவம் தான் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேடை அமைத்துக்கொடுத்த அதே வரிகள் தான் இவை.

அன்று நனைத்த அடைமழை, அன்று கொஞ்சிய தென்றல் காற்று, அன்று சுட்டெரித்த உச்சி வெயில் எல்லாவையையுமே இன்றளவும் உணர வைக்கும் அதே வரிகள் தான் இவை.

அன்று கடித்த மூட்டைப்பூச்சி, அன்று கிள்ளிப்பார்த்த நுளம்புக்குஞ்சு, அம்மாவின் அரவணைப்பு, அப்பாவின் ஆளுமை, அண்ணாவின் அன்பு, அக்காவின் அனுசரணை எல்லாவற்றையும் மீண்டும் அருகே கொணரும் அதே வரிகள் தான் இவை.

தொலைத்துபோன அந்த வீட்டுத்திண்ணை, அந்த கிடுகுவேலி, அந்த பனைமரங்கள் தென்னைமரங்கள், அந்த இருவாலி கிணறு, அந்த பள்ளிமேசை, அந்த கிரீச்சிடும் முன் வாசல் படலை எல்லாவற்றுடனும் ஒட்டவைத்த அதே வரிகள் தான் இவை.

காதலை வளர்க்க துணை நின்ற வரிகள். அதே காதல் தடம் மாறி போனபோதெல்லாம் அமைதி காக்க உடன் நின்று காவல் காத்த அதே வரிகள் தான் இவை.

பாசமும் வீரமும் தோற்றுப்போய் பகை சேர்ந்த போதெல்லாம் அதை கவனம் கொண்டு கையாள கற்பித்த அதே வரிகள் தான் இவை.

வலிகளை சுமக்க வழி காட்டிய அதே வரிகள் தான் இவை.

சோர்வு போக்கும் சொற்களையும் சொற்றோடர்களையும் சொந்த பேச்சில் சேர்க்க சொல்லித்தந்த அதே வரிகள் தான் இவை.

அதே வரிகள் தான் இவை. இருப்பினும் ஆயிரம் ஆயிரமாய் இன்றும் ஏதேதோ சொல்லி கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்த வரிகள் தந்த சுகங்களை இந்த மண்ணில் எவையும் இதுவரை தந்தது இல்லை.

சில மறையாதவை...
சில மறவாதவை...
சில மயக்கியவை...
சில மந்திரித்தவை...
சில மகிழ்வித்தவை...

◆◆

இந்த கட்டுரைக்கான கருத்துக்களை மின்னஞ்சலில் பதிக்க : udhaydharshans@gmail.com