ஷான் 
உதே 
 Shaan
Uday 
    
சிந்தனை துணுக்குகள்  1 

Jan 2021
எனது சில சிந்தனைகள்
சிறு வரிகளில்


பயண நினைவுகள்
காத்திரு
மீண்டும் வருவேன்
ஷான் உதே
பதிவேற்றியது
Jul 2022
சொற்கள்
208
பக்கம் A5
0.83
பக்கம் A4
0.55
நிமிடம்
2
பார்வைகள்
447

திகமாக இல்லை. அவளோடு இருந்தது வெறும் ஏழு நாட்கள் தான். ஆனால் அந்த ஏழு நாட்களும் ஏழு நிமிடங்கள் போல ஓடிப்போயிற்று. அவளுக்கும் எனக்குமான உறவு, இந்த ஏழு நாட்களில் இன்னும் கூடிப்போனதே அன்றி குறையவில்லை.

இன்று யாழை விட்டு நான் பிரியும் நாள். இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் தான் என்ன என்று அவள் என்னை கேட்டாள். அதிலிருந்து எனக்கு தெரிந்தது, அவளுக்கு என்னை நன்றாக பிடுத்துப்போய்விட்டது என்று. எனக்கும் அவளை நன்றாக பிடித்துப்போய்விட்டது. "மீண்டும் வருவேன்" என்று சொன்னதும் மெல்லச் சினிங்கினாள். "எங்கு சென்றாலும் உன்னை தான் நான் நினைத்து கொண்டிருப்பேன்" என்று நான் சொன்னதை அவள் நம்பவில்லை. "உனக்கு வெள்ளை தோலும் பிடிக்கும், அங்கெல்லாம் ஓடியோடி அலைவதை தான் பார்தேனே" என்று முறைத்தாள். "என்ன இருந்தாலும் உன்னைப்போல் வருமா" என்று கேட்டு சமாளித்தேன். அவள் நம்பினாளோ இல்லையோ, நாணினாள்.

"நீ சுட்டெரித்த போதெல்லாம், என் உள் அங்கங்களை சுத்தப்படுத்தினாய்" என்றேன்.

"தென்றலாய் நீ என்மீது வீசிய முத்தங்கள், என் முதுமைக்கொரு இளம் அர்த்தம்" என்றேன்.

"உன் சுவாசத்தின் சுத்தம், எனக்கு புதியதோர் உயிர்" என்றேன்.

"உன் மண்ணின் நீர், நான் இதுவரை சுவைத்தேயிராத ஒரு சுவையருவி" என்றேன்.

"உன் மீது நான் தவழ்ந்த போதெல்லாம், என் நரம்புகளும் தசைகளும் எலும்புகளும் மீள் பலம் பெற்றது" என்றேன்.

"உன் நீல வானமும் திறந்த பூமியும் உன்னை உலகழகியாக்கி விட்டது" என்றேன்.

நான் ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தேன், ரயில் புறப்பட்டதும் தெரியாமல்.

நெடுந்துயர்ந்த பனைமர காடெல்லாம், தோப்பாகி, பின் தனி மரமாகி, இறுதியில் காணாமலேயே போய்விட்டன.

வெட்ட வெளிகள் எல்லாம் நகரங்களாக மாறிக்கொண்டே போயின.

தமிழ்நகர் பெயர்களெல்லாம் மாற்றான் மொழியில் மாறிக்கொண்டே போயின.

நெடிய கோயில் கோபுரங்கள் எல்லாம் ஏதோ அரைவட்ட வெள்ளை மாளிகைகளாக மாறிக்கொண்டே போயின.

நெஞ்சம் கணத்துப்போய் என்னுள் சொல்லிக்கொன்டேன்.

"காத்திரு. மீண்டும் வருவேன்."

◆◆

இந்த கட்டுரைக்கான கருத்துக்களை முகநூலில் பதிக்க :
இந்த கட்டுரைக்கான கருத்துக்களை மின்னஞ்சலில் பதிக்க : udhaydharshans@gmail.com