ஷான் 
உதே 
 Shaan
Uday 
    
சிந்தனை துணுக்குகள்  1 

Jan 2021
எனது சில சிந்தனைகள்
சிறு வரிகளில்


சிந்தனை துணுக்குகள்
எனது சில சிந்தனைகள்
சிறு வரிகளில்
ஷான் உதே
Read On PDF
பதிவேற்றியது
Jan 2021
சொற்கள்
475
பக்கம் A5
1.90
பக்கம் A4
1.27
நிமிடம்
4
பார்வைகள்
451

கொரோனா

டி ஓடி சுற்றம்பத்தும் சேர்த்து வைத்த சொத்து பத்திரங்கள்
கோடி கோடியாய் சுற்றி எங்கும் சுருட்டிக்கொண்ட காகிதப்பணங்கள்
தேடி தேடி தரம் பார்த்து தேர்ந்தெடுத்த சொந்த பந்த உறவுகள்
ஆடி பாடி கூடி பிறர் தம் வீழ்வை வஞ்சனை சொன்ன தருணங்கள்
நாடு நாடிப்போய் நாடிய நாற்பதாயிரம் நற்பெயர்கள்
எல்லாம் இப்போ
வாடி வாடி வதங்கி வசம் இழந்து போகிறதே
அதோ அந்தவோர் வைரஸால்;



கண்டால் சொல்லுங்கள்

ண்டால் சொல்லுங்கள்
ஒற்றுமையை உணர்த்தவேண்டிய மதவாதிகள் யாரையேனும்
ஒருமையை உணர்த்தவேண்டிய அரசியல்வாதிகள் யாரையேனும்
கண்டால் சொல்லுங்கள்



பெருஞ்செல்வம்

றிவினுள் பெரிதினும் அறிவு மொழியறிவு
அழகினுள் பெரிதினும் அழகு பேச்சழகு
செல்வத்தினுள் பெரிதினும் செல்வம் வருங்காலம்



இருந்தால் சொல்லுங்கள்

ருந்தால் சொல்லுங்கள்

மதம்தான் மனிதநேயம் மதங்களினால் தான் மனிதனுக்கே நேயம்
என்று சொல்லி சொல்லியே மனிதர்களை மந்தைகளாக்கிப் பார்கின்ற
மனிதர் கூட்டம் இல்லாத நாடு ஒன்று

சொல்லாட்சி கொண்டதோர் நல்லாட்சி அமைத்துக்கொள்வோம்
என்று சொல்லி சொல்லியே எம் சிந்தனை சிறகுகளை சிதைத்து கொள்கின்ற
மனிதர் கூட்டம் இல்லாத நாடு ஒன்று

இறைவனின் சிந்தனை தான் நம் சிந்தனை இறைவனே எமது சிந்தனை
என்று சொல்லி சொல்லியே மனித மனங்களில் மூட நம்பிக்கைகளை பேணிப்பாதுகாத்துவரும்
மனிதர் கூட்டம் இல்லாத நாடு ஒன்று

மக்கள் நலம் மக்களே நலம்
என்று சொல்லி சொல்லியே தம் நலம் தம் மக்கள் நலம் பேண ஆட்சி முடி ஏந்தியிருக்கும்
மனிதர் கூட்டம் இல்லாத நாடு ஒன்று

இருந்தால் சொல்லுங்கள்
அங்கு நானொரு பூச்சி புழுவாக அல்லது செடி கொட மரமாக வாழ்ந்துவிட்டு போகிறேனே
இருந்தால் சொல்லுங்கள்



சேர்த்தவை

வெளியே சேமித்து வைத்த பொருள் யாவும் ஒரு நாள் தொலைந்துவிடும்
உள்நோக்கி சேர்த்த பொருள் யாவும் உன்னோடு வரும்



அல்ல

ன்னை விட படித்தவர் இவ்வுலகில் அதிகம்
ஆனால் அவர்கள் எல்லோரும் உன்னை விட அறிவாளிகள் அல்ல
உன்னை விட பணம் படைத்தவர் இவ்வுலகில் அதிகம்
ஆனால் அவர்கள் எல்லோரும் உன்னை விட செல்வந்தர்கள் அல்ல
உன்னை விட வடிவானவர்கள் இவ்வுலகில் அதிகம்
ஆனால் அவர்கள் எல்லோரும் உன்னை விட அழகான மனிதர்கள் அல்ல

பணம் படைத்தவர்கள் எல்லோரும் எல்லோருடனும் சிரித்து பேசுவதில்லை
பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் எல்லோருடனும் பேசி மகிழ்வதில்லை
வடிவு பெற்றவர்கள் என்று நினைப்போர் எல்லோரும் எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதில்லை



தஞ்சமாகிப்போகும் வரை

கெஞ்சிப்பார்தேன
கொஞ்சிப்பார்தேன்
வெள்ளைப்பஞ்சைப்போல் பழகிப்பார்தேன்
நெஞ்சம் அஞ்சி போன போதெல்லாம் தஞ்சமாகிக்கூட போனேன்
ஏனோ
மிஞ்சி மிஞ்சி போகிறது இந்த நஞ்சுள்ளம் கொண்ட வஞ்சனை சொல்லும் கூட்டம்

இனி
கஞ்சி உண்ணும் பஞ்சம் வந்தாலும்
மிஞ்சியிருக்கும் நெஞ்சுரம் கொண்டு
வஞ்சம் தீர்க்க போகிறேன்
அஞ்சி அஞ்சி அவர் கூட்டம் எங்கெங்கேயோ
தஞ்சமாகிப்போகும் வரை



இனி வஞ்சனைகள் செய்

வாழ்நாள் முழுதும் வஞ்சனைகள் செய்து ஒரு நாள் ஒரேயொரு நல்வினை செய்
"கெட்டவன் என்றீர்களே. எவ்வளவு நல்லவன் கண்டீரோ"
என்று உலகம் சொல்லும்

வாழ்நாள் முழுதும் நல்வினைகள் செய்து ஒரு நாள் ஒரேயொரு வஞ்சனை செய்
"நல்லவன் என்றீர்களே. எவ்வளவு கெட்டவன் கண்டீரோ"
என்று உலகம் சொல்லும்



உலகறிய சொல்

ண்மையைச்சொல்
உரக்கச்சொல்
உறுதிப்படச்சொல்

அதை ஊர் அறியச்சொல்

ஊரெல்லாம் கூட்டமாய் கூடி
குரைத்து, கணைத்து, உறுமி, ஊளையிட்டு கலைத்துப்போன பின்
மீண்டும் அந்த உண்மையை சொல்

அதை இப்போ உலகறியச்சொல்



அப்பா அம்மா உள்பட

பிறந்த காலங்களில் தாய் தந்தை மடியிலும் தோளிலும் தூங்கி விளையாடினோம்.
நடை பயின்ற காலம் வந்த பின் பெற்றவரை தள்ளி விட்டு அக்கா தங்கை அண்ணன் தம்பி கை கோர்த்து விளையாடினோம்.
காலம் சில கடந்து விட அக்கா தங்கை அண்ணன் தம்பி எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு நண்பர்களுடன் கூத்தாடினோம்.
பின்னொரு நாள் காளை பருவம் ஆன பின் நண்பர்களை ஓரம் கட்டிவிட்டு காதலர் துணை தேடி கொண்டோம்.
காலம் இன்னும் பல கடக்க காதலை ஓரம் கட்டிவிட்டு நல்ல இடம் பார்த்து கட்டிக்கொண்டோம்.
பின் கட்டியவர்களும் கசந்து போய்விட பிள்ளைகளே காலம் என்றிருந்தோம்.
இன்று பிள்ளைகள் எங்களை கடந்து போய் கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் facebookல் தொலைந்து போன எல்லோரையும் தேடி கொண்டிருக்கிறோம்

அப்பா அம்மா உள்பட

◆◆

இந்த கட்டுரைக்கான கருத்துக்களை மின்னஞ்சலில் பதிக்க : udhaydharshans@gmail.com