எழுதியவைகள் | The Written 5
|
வாழ்க்கை நினைவுகள் Sept 2023 தயவு செய்து என்னை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும் மேசையில் பலகாலம் அந்த புத்தகம் தூங்கிக்கிடந்தது. எழுப்பிவிடுவார் யாருமின்றி. யார் வீட்டினுள் அதை கொணர்ந்தார் என்று தெரியவில்லை. கொணர்ந்தவரே அதை பெரிதாக கண்டுகொண்டது போலவும் தெரியவில்லை. அந்த புத்தகத்தை கடந்து போய் வரும் நேரமெல்லாம், அது கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. பல நாட்கள் கடந்த பின்பும் கூட அது அந்த மேசையை விட்டு அகலாத நிலையில், அந்த புத்தகம் கெஞ்சியபடி ஒரு நாள் கேட்டது என்னை, "தயவு செய்து என்னை ஒருமுறை வாசிக்கவும்". ஒருநாள், யாருக்கு அந்தப்புத்தகம் உரித்தானதென்று தெரியாததால், எல்லோருமே கூட்டாக வெளியே போயிருந்த தருணம் பார்த்து, 'சரி, என்னதான் சொல்ல வருகிறாய் என்று பார்ப்போம்' என்று, அதை எடுத்து திறந்துப்பார்த்தேன். மேலும்... எழுத்துக்கள் | Articles 62
|
|